இயக்குனர் சுகுமாருக்கு உதவி செய்கிறேனா? உப்பென்னா இயக்குனர் மறுப்பு
ஜூலை 30, 2022
Advertisement
தெலுங்கில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் உப்பென்னா. விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக, தற்போது பிரபலமாகி வரும் கிரீத்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார் படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தின் இயக்குனர் சுகுமாருடன் அமர்ந்து இவர் சீரியஸாக விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் திரைக்கதையில் இயக்குனர் சுகுமாருக்கு உதவியாக இருந்து புச்சிபாபு பணியாற்றுகிறார் என்கிற செய்தியும் வெளியானது.
இந்த தகவல் இயக்குனர் புச்சிபாபுவின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இந்த செய்தியில் உண்மை இல்லை என உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் புச்சிபாபு, “அந்த புகைப்படத்தில் என்னுடைய படத்தின் கதை குறித்து இயக்குனர் சுகுமாருடன் நான் விவாதித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இயக்குனர் சுகுமாருக்கு திரைக்கதையில் உதவும் அளவிற்கு நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை..” என்று கூறியுள்ளார் புச்சிபாபு

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!