
ரிலீசுக்கு தயாரான இரண்டு வானம்
ஏப் 27, 2026
Advertisement
முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் போன்ற படங்களை கொடுத்த இயக்குநர் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் "இரண்டு வானம்". சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கிறார்கள். தினேஷ் கே பாபு, ஒளிப்பதிவு செய்கிறார் தீபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. படத்தில் இடம் பெறும் "வெள்ளிச் சுடரே" என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் படம் வெளியாகும் என்று தெரிகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!