
ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள்
மார் 26, 2025
Advertisement
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ஜனநாயகன். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் திரைக்கு வருவதாக சமீபத்தில் அறிவித்தார்கள். இந்த நிலையில் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படமும் பொங்கலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும்கூட பொங்கலை இலக்காக வைத்து தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பொங்கல் தினத்தின்போது தெலுங்கில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுவதால், இதே நாளில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் டிராகன் படமும் திரைக்கு வரப்போகிறது. இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!