
மீண்டும் வில்லி வேடத்தில் திரிஷா
ஆக 22, 2024
Advertisement
‛அனிமல்" படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் ‛ஸ்பிரிட்" என்ற படத்தை இயக்க உள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் போலீஸ், மற்றொருவர் வில்லன். இந்த படத்தில் இரு நாயகிகள் நடிக்க உள்ளனர். அந்தவகையில் ஒரு நாயகியாக திரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இவர் வில்லன் பிரபாஸிற்கு ஜோடியாக வில்லியாகவே நடிக்க போகிறாராம். ஏற்கனவே தமிழில் தனுஷின் கொடி படத்தில் அரசியல்வாதி வில்லியாக திரிஷா நடித்தார். இப்போது மீண்டும் வில்லியாக அவர் நடிக்க போகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!