ஓடிடி ரிலீஸ் பிரச்னைக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை : அமைச்சர் ராஜ்மோகன்
செப் 26, 2026
Advertisement
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று(செப்., 26) நடந்தது. அதற்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், ‛‛நம்முடைய துறையைப் பொறுத்த வரை எப்பவும் தனி கவனம் இருக்கும். உள்ளாட்சி கேளிக்கை வரி விலக்கு பற்றி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். இனி வருடந்தோறும் சினிமா விருதுகள் வழங்கப்படும். படப்பிடிப்பு நடத்த இனி யாரும் தலைமை செயலகம் வந்து நிற்கக்கூடாது, எல்லாம் நவீன மையமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரியான விவரங்கள் கொடுக்கப்பட்டு அனுமதி கோரப்படும் பட்சத்தில் ஆட்டோமேட்டிக்காக அனுமதி பெறப்படும்.
ஓடிடி வெளியீடு கால இடைவெளி, பைரசி போன்றவைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பேசி வருகிறோம். இந்த விவரங்கள் பேசி முடிக்க முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசுவோம். தயவுசெய்து உங்கள் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்து வர வேண்டாம், உட்கார்ந்து பேசி தீர்ப்போம்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!