ஆர்ஆர்ஆர் - பிரிந்து சென்ற புலியும், சிறுத்தையும்...
ஆக 27, 2021
Advertisement
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் "ஆர்ஆர்ஆர்". இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் நடைபெற்று கடந்த வாரம் படக்குழுவினர் ஐதராபாத் திரும்பினர். அங்கு விடுபட்ட காட்சிகள் சிலவற்றின் படப்பிடிப்பு கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடந்து வந்தது.
நேற்றுடன் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. அது குறித்து ஆர்ஆர்ஆர் குழு, “படத்தின் கடைசி ஷாட் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு புலியும், சிறுத்தையும் புறப்பட்டுச் சென்ற காட்சி,” என அவர்கள் இருவரும் காரில் தனித் தனியே சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்கள்.
அக்டோபர் 13ம் தேதியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!