
தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு!
ஜுன் 5ல் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இன்று(மே 17) படத்தின் டிரைலர் வெளியானது. 2 நிமிடம் ஓடக் கூடிய இந்த டிரைலரில் கமல், சிம்பு இடையேயான மோதல் தான் கதை என தெரிகிறது.
கேங்ஸ்டரான கமலின் உயிரை சின்ன வயது சிறுவன் சிம்பு காப்பாற்றுவார் போல் தெரிகிறது. அதன்பின் சிம்புவை தன் மகன் போல் வளர்க்கிறார். ஒருக்கட்டத்தில் இவர்களுக்குள் பகை வர நீயா... நானா... பார்த்துவிடலாம் என மோதுகின்றனர். படத்தின் டிரைலர் இதை தான் சொல்கிறது.
படத்தின் காட்சி அமைப்பு, பின்னணி இசை கமலுக்கு இணையாக சிம்புவின் நடிப்பு, இருவரின் ஆக்ரோஷமான ஆக் ஷன் மோதல் என டிரைலர் பார்க்க நன்றாக உள்ளது. அதோடு கமலின் மனைவியாக அபிராமியும், காதலியாக திரிஷாவும் வருவார்கள் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் டிரைலர் வெளியாகி உள்ளது. ஒரு மணிநேரத்தில் தமிழ் டிரைலருக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன. தெலுங்கு, ஹிந்திக்கு குறைவான பார்வைகளே கிடைத்தன.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!