
இந்த வாரம் ரைட்டர், ராக்கி இடையேதான் போட்டி ?
"தள்ளிப் போகாதே, ஆனந்தம் விளையாடும் வீடு" ஆகிய இரண்டு படங்களும் வெளியாவது சமூக வலைத்தளங்களில் கூட அதிகம் பகிரப்படவில்லை. "துனேரி" படம் சிறிய பட்ஜெட் படம், நடிகர்களும் புதுசு.
"ரைட்டர்" படத்தை பா.ரஞ்சித் தயாரிப்பதும், சமுத்திரக்கனி நடித்திருப்பதும், இந்தப் படத்தின் டிரைலர் ஏற்கெனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும் ரசிகர்களிடம் தெரிந்துள்ளது. இப்படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளார்கள்.
"ராக்கி" படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளியிடுவதால் இப்படம் பற்றியும் ரசிகர்களுக்கத் தெரிந்திருக்கிறது. இப்படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சன ரீதியாக "ரைட்டர், ராக்கி" படங்கள் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதை மீறி குடும்பக் கதையான "ஆனந்தம் விளையாடும் வீடு", காதல் கதையான "தள்ளிப் போகாதே" படங்கள் வரவேற்பைப் பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!