சீன மொழியில் வெளியாகும் கனா
மார் 15, 2022
Advertisement
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் மற்றும் பலர் நடிக்க 2018ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் "கனா".
இப்படம் இந்த வாரம் மார்ச் 18ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. இது பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. இப்படம் சீனாவில் வெளியாவது குறித்து படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார்.
“எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பான "கனா" படம் சீனாவில் மார்ச் 18ம் தேதி வெளியாவது சூப்பர் மகிழ்ச்சி. கனா குழுவுக்குப் பெருமையான ஒரு தருணம்” என்று சிவகார்த்திகேயன் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார்.
கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஒரு கிராமத்துப் பெண்ணின் சாதனைப் பயணம் தான் இந்த "கனா". விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தப் படம் தெலுங்கில், "கௌசல்யா கிருஷ்ணமூரத்தி" என்ற பெயரில் ஐஸ்வர்யா நடிக்க ரீமேக் ஆகி வெளிவந்தது. ஹிந்தியில் "நாட் அவுட்" என்ற பெயரில் டப்பிங் ஆகி யு டியுபில் வெளியிடப்பட்டு 78 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!