இந்த வாரம்… டல் ஆன வாரம்…
ஜூன் 17, 2024
Advertisement
ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. சிறிய படம், நடுத்தரப் படம், பெரிய படம் என வந்தாலும் ஓடும் படங்கள் என்பது குறைவாகவே உள்ளது. இந்த வாரம் ஜூன் 21ம் தேதி சொல்லிக் கொள்ளும்படியான பெரிய படங்கள் என எந்தப் படமும் வரவில்லை. மூன்று சிறிய படங்கள்தான் வெளியாக உள்ளது.
ஷாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா ஆகியோர் நடிக்கும் "லாந்தர்" படம், பாஸ்கர் சக்தி இயக்கத்தில், குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா மற்றும் பலர் நடித்துள்ள "ரயில்" படம், ராகுல் கபாலி இயக்கத்தில், ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடிக்கும் "பயமறியா பிரம்மை" ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள்.
இவை தவிர கமல்ஹாசன் நடித்த "குணா", விஜய் நடித்துள்ள "போக்கிரி, துப்பாக்கி" ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன.
அடுத்த வாரம் ஜூன் 27ம் தேதி "கல்கி 2898 ஏடி" படம் வெளியாக உள்ளதால் இந்த வாரமும், அடுத்த வாரமும் தமிழ்ப் படங்களின் ரிலீஸ் "டல்" ஆகவே இருக்கும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!