
சிரஞ்சீவிக்காக மனம் மாறிய தியேட்டர் அதிபர்கள்
தனது மகன் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள "பெத்தி" படம் சிக்கலில் மாட்டுவதை அறிந்த சிரஞ்சீவி, இந்தப் பஞ்சாயத்தில் இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால், தியேட்டர் அதிபர்கள் தற்காலிகமாக மனம் மாறியுள்ளனர்.
இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் ஜூன் 30ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு சதவீதப் பங்கு என்பதை தள்ளி வைத்துள்ளனர். இதனால், "பெத்தி" படம் பழைய வாடகை முறையிலேயே திரையிடப்பட உள்ளது.
அதேசமயம், குழு அளிக்கும் அறிக்கை ஜூலை 3ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக தெலுங்குத் திரையுலகத்தில் வசூல் நாயகனாக பல படங்களில் லாபத்தைக் கொடுத்த சிரஞ்சீவிக்காக இந்த ஒரு மாதத் தள்ளி வைப்பு என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!