தி வாரியர் படப்பிடிப்பு நிறைவு: ஜூலை 14ம் தேதி ரிலீஸ்
மே 31, 2022
Advertisement
இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு, தமிழில் இயக்கும் படம் தி வாரியர். இதில் ராம் பொத்தனேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி உள்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் புல்லட் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், படம் வருகிற ஜூலை 14ம் தேதி வெளிவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகராக ராம் பொத்தனேனி இதில் போலீஸ் அதிகாரியாகவும், ஆதி கேங்ஸ்டராகவும் நடிக்கிறார்கள். ராம் பொத்தனேனி தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. ஆந்திராவில் 450 தியேட்டர்களிலும், தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களிலும் வெளியாகும் என்று தெரிகிறது. படத்தின் இந்தி வெளியீட்டு உரிமம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!