‛தி ரோட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
செப் 09, 2023
Advertisement
அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் "தி ரோட்". சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல. ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை எ.எ.எ சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். படம் முழுவதும் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததோடு , அச்சம்பவங்கள் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று எந்த சமரசமும் இல்லாமல் நடித்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது என வீடியோ மூலமாக தெரிவித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை செப்டம்பர் மூன்றாவது வாரம் திரை பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!