
த ராஜா சாப் - மோஷன் போஸ்டர் புதிய சாதனை
அக் 24, 2024
Advertisement
பான் இந்தியா நடிகராக பிரபலமாகிவிட்ட பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் "த ராஜா சாப்". மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
நேற்று படத்தின் நாயகன் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அது 24 மணி நேரத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. மொத்தம் 8.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த "ப்ரோ" திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 5.83 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை தற்போது "த ராஜா சாப்" முறியடித்துள்ளது. 5.1 மில்லியன் பார்வைகளைப் பெற்று இதுவரையில் இரண்டாம் இடத்தில் இருந்த அஜித் நடித்து வெளிவந்த "வலிமை" படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பேய்க் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் "த ராஜா சாப்" படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…