
ஓடிடியில் வெளியானது ‛தி லெஜன்ட்
மார் 03, 2023
Advertisement
ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் லெஜென்ட் சரவணன் நடித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் தி லெஜன்ட். இந்த படத்தில் அவருடன் ஊர்வசி ரவுட்டாலா, பிரபு, விஜயகுமார், விவேக், சுமன், நாசர், யோகி பாபு உட்பட பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. என்றாலும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்து ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகும் நிலையில், இப்படம் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஓடிடியில் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement












வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!