
‛தி கிரேட் இந்தியன் கிச்சன் டிரைலர் வெளியானது
அக் 25, 2022
Advertisement
மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்த படத்தை தற்போது தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் ஆர். கண்ணன். மலையாளத்தில் நிமிஷா சஜயன் லீடு ரோலில் நடித்த இப்படத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். அவருடன் ராகுல் ரவீந்திரன், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் மிகப்பெரிய கனவுகளுடன் புகுந்து வீட்டிற்கு வரும் ஒரு பெண் தனது ஆசைகள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் அடுப்பங்கரைக்குள் மட்டுமே வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு அவர் எப்படி தனது கனவுகளை நிறைவேற்றுகிறார் என்பதுதான் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் கதையாகும். இது குறித்த பல காட்சிகள் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!