
தர்ஷன் ஜோடியான லாஸ்லியா
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த தெனாலி படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழ் ரீமேக்கை தயாரித்து, நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது. ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், பாடலாசிரியராக மதன் கார்க்கியும் பணிபுரிகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!