பித்தல மாத்தி ஆக மாறிய தண்ணி வண்டி : இப்படியும் ஒரு ரீ-ரிலீஸ்
ஜூன் 14, 2024
Advertisement
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ரீ-ரிலீஸ் என்பது அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இப்படி ஒரு ரீ-ரிலீஸை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அதாவது, படத்தின் பெயரை மாற்றி ஒரு ரிலீஸ்.
மாணிக்க வித்யா இயக்கத்தில் உமாபதி, சம்ஸ்கிருதி, பாலசரவணன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வெளியான படம் "தண்ணி வண்டி".
அந்தப் படத்தின் பெயரை "பித்தல மாத்தி" எனப் பெயர் மாற்றி புதிய படம் போல இன்று ரிலீஸ் செய்கிறார்கள். சினிமா ரசிகர்கள் இது ஏதோ ஒரு புதுப்படம் என நினைத்து பார்க்க வருவார்கள் என நினைத்து இப்படி செய்திருக்கிறது படக்குழு.
இது என்ன சரியான "மாத்தி" வேலையா இருக்கே என கோலிவுட்டிலேயே ஆச்சரியப்படுகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!