தலைவன் தலைவி முதல்வார இறுதியில் 25 கோடி வசூல்
ஜூலை 28, 2025
Advertisement
பாண்டிராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "தலைவன் தலைவி". இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தியேட்டர்களில் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து வருகிறார்கள். மீண்டும் இப்படியான ரசிகர்கள் கூட்டம் சுமார் 90 நாட்களுக்குப் பிறகு வருவது தியேட்டர்காரர்களை மகிழ்விக்க வைத்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் இப்படம் 25 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோருடைய முந்தைய படங்கள் எதிர்பார்த்த அளவு வசூலைத் தரவில்லை, பெரிய அளவில் வரவேற்பையும் பெறவில்லை. எனவே, இந்தப் படம் அவர்கள் இருவருக்கும் முக்கியமானதாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடி இந்தப் படம் வசூல் ரீதியாக முன்னேறி வருகிறது.
இப்படத்துடன் வெளியான "மாரீசன்" படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!