கேம் சேஞ்சர் டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்கள் வரவேற்பு
ஜன 03, 2025
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் "கேம் சேஞ்சர்". இப்படம் அடுத்த வாரம் ஜனவரி 10ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரைலர் யு டியுப் தளத்தில் வெளியானது. டிரைலருக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர்.
தெலுங்கில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலராக "புஷ்பா 2", 44 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. "குண்டூர் காரம்" டிரைலர் 37 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது "கேம் சேஞ்சர்" டிரைலர் 34 மில்லியன் பார்வைகளைக் கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த டிரைலர் வெளியாகி 24 மணி நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் உள்ளது. அதற்குள் மேலும் பார்வைகளைப் பெற்று முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
"கேம் சேஞ்சர்" ஹிந்தி டிரைலர் 13 மில்லியன் பார்வைகளையும், தமிழ் டிரைலர் 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!