
தெலுங்கில் டப்பிங் படங்களில் புதிய சாதனை படைத்த ஜெயிலர்
அந்த வரிசையில் தமிழ்ப் படங்கள் மட்டும் இடம் பெறாமல் இருந்தது. "பொன்னியின் செல்வன்" படம் அப்படிப்பட்ட ஒரு சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற மொழிகளில் அந்தப் படத்தின் இரண்டு பாகங்களையும் ரசிகர்கள் கண்டு கொள்ளவே இல்லை. அந்த வருத்தத்தைத் தற்போது "ஜெயிலர்" படம் போக்கியுள்ளது.
தெலுங்கில் சுமார் 12 கோடிக்கு விற்பனையான "ஜெயிலர்" படம் பங்குத் தொகையாக மட்டும் 42 கோடியைத் தந்து 30 கோடி ரூபாய் லாபத்தைத் தந்துள்ளது. வரும் நாட்களிலும் படம் கூடுதல் லாபத்தைத் தரும் என்கிறார்கள்.
இதற்கு முன்பு கன்னடப் படமான "காந்தாரா" படம் 27 கோடி ரூபாய் லாபத்தைத் தந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது "ஜெயிலர்" முறியடித்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…