டாணாக்காரன் இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
மார் 30, 2023
இயக்குனரும், நடிகருமான தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார். ஒரு சில காரணங்களால் காவலர் பணியை விட்டு விலகி பின்னர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அசுரன், ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் அவரது இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் டாணாக்காரன். தற்போது விடுதலை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியது, என் அடுத்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக உருவாகிறது. இத்தில் நடிக்க தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்த போகிறோம்" என கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!