
புதிய அப்டேட்: இறுதிகட்டத்தில் சூர்யாவின் சனிக்கிழமை - ஆகஸ்ட் 29ல் ரிலீஸ்
ஜூலை 06, 2024
Advertisement
இயக்குநர் விவேக் ஆத்ரேயா, டிவிவி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்தியா படம் ‛சூர்யாவின் சனிக்கிழமை". தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்த படம் மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கி இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் புதிய தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை நானியை முரட்டுத்தனமான இளைஞராக சித்தரித்து வந்த படத்தின் போஸ்டர்களில் இருந்து மாறுபட்டு அவர் ஒரு சாதாரண நடுத்தர இளைஞராக சித்தரித்து தற்போது போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!