
சூர்யவம்சம்... வாரணம் ஆயிரம்... படங்களுக்குபின் : ராதிகா சொன்ன தகவல்
இயக்குனர் வெங்கி அட்லுாரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் மமிதா பைஜூ, பவானிஸ்ரீ உள்ளிட்டோர் வந்திருந்தனர். மற்ற சிலர் மிஸ்சிங். விழாவில் ராதிகா பேசுகையில் "சூர்யா மனப்போராட்டங்கள் அதிகம். அதை நான் பல ஆண்டுகள் பார்த்து இருக்கிறேன். அது வெளியே தெரியாது. அதற்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கிறேன். ஆரம்பத்தில் இப்படி நடி, அப்படி நடி என அட்வைஸ் கொடுத்து இருக்கிறேன். இப்போது அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
நான் ரசித்த குடும்ப படம் சூர்யவம்சம். அதற்குபின் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அதேபோல், சூர்யாவும் வாரணம் ஆயிரம் படத்துக்குபின் அழகாக இருக்கிறார். நான், சரத்குமார் இந்த படத்தை பார்த்து ரசித்தோம். அவருக்கு படம் மிகவும் பிடித்து இருந்தது. படம் பார்த்துவிட்டு அண்ணன் சிவகுமாரும் நீண்ட நேரம் பேசினார்.
நான் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. வெற்றி, தோல்வி அனைத்தையும் பார்த்துவிட்டேன். இப்படிப்பட்ட படங்களின் வெற்றி சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த கதையில் கொஞ்சம் வேறு மாதிரி நடித்தால், வேறு மாதிரி சிரித்தால் தப்பாகிவிடும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார் சூர்யா.
என் கணவர் சரத்குமார் நடித்த டியூட் படப்பிடிப்பில் மமிதா பைஜூவை பார்த்தேன். அவர் அதிகம் பேசவி்ல்லை. இந்த பொண்ணு சிறப்பாக நடித்து இருக்கிறார் என அவர் சொன்னார். அதை அந்த படத்தில் பார்த்தேன். இந்த படத்தில் இன்னும் அதிகம் பார்த்தேன். மமிதாவை செல்லமாக மம்மி என்பேன். ஜி.வி.பிரகாஷ் படம் பார்த்துவிட்டு ரிலீசுக்கு முன்பே பாராட்டினார்"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!