
கடன் வாங்கி கருப்புவைக் காப்பாற்றிய சூர்யா
மே 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம். ஆனால், கடைசி நேரத்தில் எழுந்த கடன் சிக்கல் காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இடைவிடாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு படம் மே 15 அன்று வெளியானது.
சுமார் 100 கோடி வரையிலான பாக்கித் தொகையை செலுத்தினால் மட்டுமே படம் வெளியாகும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது என்றார்கள். அந்தக் கடனை சூர்யா ஏற்று படத்தை வெளியிட உதவி செய்துள்ளார். அதன்பின் படம் வெளியாகி வசூலைக் குவித்தது.
இந்த சூழல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார். அந்த சூழ்நிலை என்னை கடன் வாங்குவதற்குத் தள்ளியது. அவ்வளவு தொகை கடனை சமாளிக்கும் நிலையில் தானும் இல்லை. இருந்தாலும் படத்தைத் தள்ளி வெளியிட மனம் சம்மதிக்கவில்லை. அந்த சமயத்தில் அவரது குடும்பமும் தன் பின்னால் நின்றது எனத் தெரிவித்துள்ளார். ஒருவேளை படத்தின் ரிசல்ட் வேறு விதமாக அமைந்திருந்தால் அவற்றை சமாளிக்க வேண்டிய சிக்கலை குடும்பமே பார்த்திருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
நல்ல வேளையாக படம் சூப்பர் ஹிட்டாகி சூர்யாவை மட்டுமல்ல கருப்பு படத்தையும் காப்பாற்றியது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!