ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா
மார் 07, 2024
Advertisement
நடிகர் சூர்யா தற்போது "கங்குவா" படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன. இதை தொடர்ந்து விரைவில் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் ஹிந்தியில் "கர்ணா" என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது.
இந்த நிலையில் புதிதாக சூர்யா, ‛இன்று நேற்று நாளை, அயலான்" படங்களின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்திற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!