வசந்தபாலன் படத்தில் இணையும் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலம்
செப் 01, 2021
Advertisement
இயக்குனர் வசந்தபாலனின் புதிய திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா, அறந்தாங்கி நிஷாவை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களால் செல்லமாக தாத்தா என்று அழைக்கப்படும் சுரேஷ் சக்கரவர்த்தியும் வசந்தபாலனின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்த இரண்டு பேர் ஏற்கனவே இடம் பிடித்துள்ள நிலையில் மூன்றாவது நபராக சுரேஷ் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்திய பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான வசந்தபாலன் பெயரிப்படப்படாத புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாகவும், துஷாரா விஜயன் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான வனிதா விஜயகுமார் மற்றும் அறந்தாங்கி நிஷா நடிக்க ஒப்பந்தமாகி ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களால் செல்லமாக தாத்தா என்று அழைக்கப்படும் சுரேஷ் சக்கரவர்த்தியும் வசந்தபாலனின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்த இரண்டு பேர் ஏற்கனவே இடம் பிடித்துள்ள நிலையில் மூன்றாவது நபராக சுரேஷ் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்திய பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!