
இந்திக்கு ஆதரவு, தமிழுக்கு புறக்கணிப்பு: சூர்யா மீது எழும் விமர்சனம்
மே 22, 2026
Advertisement
‛கருப்பு" படத்தின் உலகளாவிய வசூல் 207 கோடி என்று நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, வட மாநிலகம், உலக முழுவதும் சேர்ந்து கடந்த 7நாட்களில் இந்த வசூலை ஈட்டியுள்ளது கருப்பு. இது உண்மையில் பெரிய வெற்றி. கடந்த 10 ஆண்டுகளாக வெற்றி கொடுக்காமல் தவித்து வந்த சூர்யாவுக்கு, அவருடைய ரசிகர்கள், குடும்பத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.இந்நிலையில், கோடை விடுமுறை முடிய இன்னும் 10 நாட்கள் இருப்பதால் படத்தின் வசூலை அதிகரிக்க படக்கழு முடிவு செய்துள்ளது.
இன்று முதல் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு ஊர்களில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்த உள்ளனர். இன்று கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட தியேட்டர்களுக்கு செல்கிறார்கள். நாளை வேறு ஊர்களுக்கு செல்ல உள்ளனர். கருப்பு பட நிகழ்ச்சிகள், பிரஸ்மீட்டில் இதுவரை சூர்யா கலந்துகொள்ளவில்லை. மதுரையில் வணிக ரீதியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்றார். ஏனோ, அவர் தமிழக மக்களை, தமிழ் மீடியாவை சந்தித்து பேசவில்லை. ஆனால், மும்பையில் நடந்த ஜோதிகாவின் ‛சிஸ்டம்" என்ற இந்தி ஓடிடி வெளியீட்டு நிகழ்ச்சியில் மகன், மகள் என குடும்பத்துடன் கலந்துகொண்டார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட சூர்யா, அங்குள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ஆனால், தமிழகத்தில் தன் பட நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இல்லை. தமிழ் மீடியாவை, தமிழக மக்களை புறக்கணிக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருவேளை கருப்பு வெற்றிவிழாவில் கலந்துகொள்வாரா என்னமோ?
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!