
இந்த வாரம் ஓடிடி தளங்களை ஆக்கிரமிக்கும் சூப்பர் வெப் தொடர்கள்....!
இந்த வாரம் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு விறுவிறுப்பான வெப்தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அவை என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மோலிவுட் டைம்ஸ்
மலையாள இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் நஸ்லென்,ஷரப் யு தீன், சங்கீத் பிரதாப், சுஜித்ராஜ் வி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் "மோலிவுட் டைம்ஸ்". இந்த படம் நாளை (ஜூலை 3ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இசகப்பட்டணம் (Isakapatnam)
தெலுங்கு இயக்குநர் கேரி பி.எச். இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் வெப் தொடர் "இசகப்பட்டணம் (Isakapatnam)". இந்த தொடர் இன்று (ஜூலை 2ம் தேதி) ஜியோ ஹாட் ஸாடாரில் வெளியாகி இருக்கிறது.
குர்துகோஸ்துன்னாயி (Gurthukostunnayi)
தெலுங்கில் உருவாகியுள்ள ரொமான்டிக் வெப் தொடர் "குர்துகோஸ்துன்னாயி (Gurthukostunnayi). இந்த தொடர் நாளை (ஜூலை 3ம் தேதி) ஈடிவி விண் தளத்தில் வெளியாகவுள்ளது.
ஹேங்மேன் (Hangman)
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஹேங்மேன் (Hangman)". திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் நாளை (ஜூலை 3ம் தேதி) சன் நெக்ஸ்டில் வெளியாகவுள்ளது.
வீரபத்ருணி ரகசியம் (Veerabhadruni Rahasyam)
தெலுங்கு இயக்குநர் பீமகனி ஸ்ரீ வர்தன் ரெட்டி இயக்கத்தில், அன்னி , ரகு குஞ்சே மற்றும் ரகு ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் "வீரபத்ருணி ரகசியம் (Veerabhadruni Rahasyam)". மூடநம்பிக்கையால் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து எவ்வாறு வெளிவந்தார்கள் என்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை (ஜூலை 3ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.
சூப்பர் சுப்பு (Super Subbu)
நடிகர் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள வெப் தொடர் "சூப்பர் சுப்பு (Super Subbu)". இந்த தொடர் இன்று (ஜூலை 2ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!