
மாயவன் 2 : ஹீரோவாக சந்தீப் கிஷன் தொடருகிறார்
மே 08, 2021
Advertisement
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். 2017ல் சந்தீப் கிஷன் நடிப்பில் மாயவன் என்ற படத்தை தயாரித்து, முதன்முதலாக இயயக்குனராக களமிறங்கினார். அதன்பின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தை இயக்கியவர், இப்போது கொற்றவை என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும் மாயவன் 2 படம் உருவாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். மாயவன் ரீ-லோடட் என்ற பெயரில் இது தயாராகிறது. முதல்பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது ஹீரோவாக சந்தீப் கிஷன் தொடருகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று அவரது பிறந்தநாளில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்கி 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சி.வி.குமார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!