
ஆகஸ்ட் 4ல் ரீ -ரிலீஸ் ஆகும் சுப்ரமணியபுரம்
ஜூலை 30, 2023
கடந்த 2008ம் ஆண்டில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். 1980கள் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்திய படம். காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றை கூறிய இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ‛‛கண்கள் இரண்டால்..., மதுர குலுங்க குலுங்க..."" ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்த படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தமிழகம் முழுக்க ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதில், ‛‛ஆகஸ்ட் 4ம் தேதி 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்களில் சுப்ரமணியபுரம் மீண்டும் வெளியிடப்படும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பெறுங்கள்"" என அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!