ஸ்டைலான பாட்டு வருகிறது - வடிவேலு
ஏப் 17, 2022
Advertisement
சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் வடிவேலு. முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காமெடி கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. இதுதவிர மேலும் 3 படங்களில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரபுவோ - வடிவேலு சந்திப்பு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இவர்களின் முந்தைய படத்தின் கிளாஸிக் காமெடியான சிங் இன் த ரெயின் என்ற பாடலை அந்த வீடியோவில் வடிவேலு பாடியிருந்தார்.
இதுப்பற்றி வடிவேலு கேட்டபோது, ‛‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு பிரபுதேவா தான் நடனம் அமைக்கிறார். எனக்கு ஏற்றபடி இந்த பாட்டை ஸ்டைலாக வடிவமைக்கிறார் மாஸ்டர். செட்டில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. இந்த பாட்டு மக்களை மகிழ்விக்கும்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!