
சமந்தாவை நாகார்ஜுனா சந்திக்க உள்ளதாகத் தகவல்
நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. அவரது உடல் நிலை குறித்து பதிவிட்டதும், நாகார்ஜுனாவின் மற்றொரு மகனான அகில், சமந்தா நலம் பெற வாழ்த்து தெரிவித்து தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
அதே சமயம் முன்னாள் கணவரான நாக சைதன்யா, மாமனார் நாகார்ஜுனா எந்த விதமான பதிவும் போடவில்லை. ஆனால், நாகார்ஜுனா சமந்தாவை நேரில் சென்று சந்திக்க உள்ளதாக ஒரு தகவல் டோலிவுட்டில் வெளியாகி உள்ளது. அவருடன் நாக சைதன்யாவும் செல்வாரா அல்லது இந்தத் தகவல் வெறும் வதந்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
முன்னாள் மருமகள் என்று பார்க்காமல் சக நடிகையாக சமந்தாவின் உடல்நலம் குறித்து விசாரித்து நாகார்ஜுனா, நாக சைதன்யா பதிவிட்டிருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து பரவியது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!