
சுரேஷ் ரெய்னாவின் உறவினருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பி வைத்த சோனு சூட்
சமீபத்தில் சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆயிரக்கணக்கான சிலிண்டர்களை அவர் ஆர்டர் செய்திருந்தார் என்கிற தகவல் கூட வெளியானது. இந்தநிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள தனது அத்தை ஒருவருக்கு, அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த தகவல் சோனு சூட்டின் கவனத்திற்கு சென்றதும், “கவலைப்படாதீர்கள் பாய்.. இன்னும் பத்து நிமிடத்தில் சிலிண்டர் அங்கே சென்றுவிடும்” என தைரியம் கூறி, ஆக்சிஜன் சிலிண்டரை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் சோனு சூட்.
கடந்த வருடம் தனது மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாயிக்கு மறுநாளே சொந்தமாக ட்ராக்டர் வாங்கி கொடுத்ததாகட்டும், இதோ இப்போது சுரேஷ் ரெய்னா கேட்ட உதவியை செய்து கொடுத்ததாகட்டும், ஏழை, பணக்காரன் என அனைவருக்குமே பாகுபாடில்லாமல் விரைந்து உதவி வருகிறார் சோனு சூட்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!