ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால்
அக் 09, 2025
Advertisement
எஸ்.சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில் முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள படம் “வில்”. படம் குறித்து இயக்குனர் பேசுகையில், ‛‛கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றி என் எடிட்டர் தினேசிடம் சொன்ன போது இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்தபோது சோனியா அகர்வால் ஞாபகம் வந்தது. அவர் ஜட்ஜ் கேரக்டரில் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சவுரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில் அறிமுகம் செய்தேன்.
இந்த கதை உயில் சம்பந்தப்பட்டது. உயில் பல குடும்பங்களில் பிரச்னையாக அமைந்துள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் படம் உருவாகியுள்ளது. விக்ராந்த் இன்வஸ்டிகேடிவ் ஆபிஸராக நடித்துள்ளார். நடிகை அலிகியா எல்லோரும் செய்யத் தயங்கிய ரோலில் சிறப்பாக நடித்தார் இது அடிதடி, துப்பாக்கி எல்லாம் வரும் ஆக் ஷன் படமல்ல. பீல் குட் படம்"" என்றார்.
நடிகை சோனியா அகர்வால் பேசுகையில், ‛‛இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். காரணம், எனது தம்பி சவுரப் அகர்வால் இசையமைத்துள்ளார். என்னைப்போல அவருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள். இயக்குனர் சிவராமன் உடன் ஏற்கனவே தனிமை படம் வேலை பார்த்துள்ளேன். மக்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து கதை சொல்வார். அவரே வழக்கறிஞராக இருந்தவர். இந்தக்கதையை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். விக்ராந்துடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். சின்னப்படம் பெரிய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, காதல் கொண்டேன் 1 கோடியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஆனது. மக்களுக்கு எந்த கதை பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை மற்றும் கோத்தகிரியில் படமாக்கப்பட்டுள்ளது. உறவுகளின் சிக்கல்களை, ஒரு பெண்ணின் தியாகத்தினை பேசும், ஒரு அழகான படைப்பாக சொல்கிறது"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!