இந்தியன் 2 படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி
நவ 17, 2022
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் "இந்தியன் 2". இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மழை கொட்டிய நாட்களில் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். இந்நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு சற்றே இடைவெளி விட்டிருக்கிறார்கள்.
"இந்தியன் 2" படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னால் கிரேன் விபத்து ஏற்பட்டு நின்று போனது. அடுத்து கொரோனா தாக்கம் வந்ததால் மீண்டும் ஆரம்பமாகவில்லை. பின்னர், இயக்குனர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் இடையே பிரச்சனை வந்தது. அப்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கப் போய்விட்டார் இயக்குனர் ஷங்கர். கடந்த வருடம் ஆரம்பமான அப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடமாகியும் இன்னும் முடியவில்லை. தற்போது பாடல் காட்சி படப்பிடிப்புக்காக படக்குழுவினர் நியூசிலாந்து சென்றுள்ளார்கள்.
"விக்ரம்" படம் வெளிவந்து பெரும் வெற்றி பிறகு "இந்தியன் 2" பிரச்சினைகளை பேசித் தீர்த்து மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். "இந்தியன் 2, தெலுங்குப் படம்" என இரண்டையும் தன்னுடைய முன்னாள் உதவி இயக்குனர்களாக இருந்த இன்றைய இயக்குனர்கள் சிலரின் உதவியுடன் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு படங்களையும் அடுத்த ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!