டான் டப்பிங்கை முடித்த எஸ்.ஜே.சூர்யா
டிச 27, 2021
Advertisement
மான்ஸ்டர் படம் மூலம் காமெடி கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் தனது மீள் வரவை உறுதி செய்த நடிகர் எஸ்ஜே சூர்யா, சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் காமெடி கலந்த வில்லனாகவும் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அந்தவகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட நிலையில் தற்போது இந்தப்படத்தில் தனது டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் எஸ்"ஜே.சூர்யாவும் இந்த தகவலை தெரிவித்துள்ளதுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கல்லூரி பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!