ஒன்றாக மோதப் போகும் கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள்
மே 31, 2022
Advertisement
2022ம் ஆண்டிற்கான புதுப் படங்களின் வெளியீடுகளை அந்தந்த தயாரிப்பாளர்கள் சரியாக திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. அடுத்த வரும் முக்கிய விடுமுறை நாட்களான சுதந்திர தினம், வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் எந்தெந்த படங்கள் வெளிவரப் போகிறது என்பது திரையுலகில் முக்கிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
முன்பெல்லாம் பட வெளியீட்டுத் தேதிகளை அறிவிக்க மிகவும் தயங்குவார்கள். ஆனால், இப்போது படம் வெளியாவதற்கு சில பல மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
வினயாகர் சதுர்த்தி தினத்தன்று கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள "விருமன்" படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அதே நாளில் சிவகார்த்திகேயனின் 20வது படமும் வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்திற்கு இன்னும் பெயரே வைக்கவில்லை. அதற்குள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது ஆச்சரியம்தான்.
கார்த்தியும், சிவகார்த்திகேயனும் முருகக் கடவுளின் பெயர்கள். முருகனின் பெயர் கொண்ட இருவரும் அண்ணன் வினாயகரின் பிறந்தநாளன்று இப்படி மோதிக் கொள்வது சரியா ?.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!