
மீண்டும் போலீஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்
செப் 29, 2023
Advertisement
மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர். முருகதாஸின் பிறந்தநாளில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தை ஏற்கனவே விஜய்யை வைத்து தான் இயக்கிய துப்பாக்கி படத்துக்கு இணையான ஒரு வலுவான கதையில் முருகதாஸ் இயக்குவதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு காக்கிச்சட்டை என்ற படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!