ரசிகர்களின் டுவீட்டை இடைவிடாமல் ரிடுவீட் செய்யும் சிவா
நவ 08, 2021
Advertisement
தமிழில் அஜித்துடன் மட்டுமே "வீரம், வேதாளம், விஸ்வாசம்" என மூன்று ஹிட்டுகளைக் கொடுத்து இயக்குனர் சிவா முதல் முறையாக, ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற படம் "அண்ணாத்த". படம் கடந்த வாரம் வெளிவந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பலரும் பல விதங்களில் கிண்டலடித்து அவருடைய முந்தைய படங்களையும், வேறு சில படங்களையும் வைத்தே "அண்ணாத்த" படத்தை எடுத்து முடித்துவிட்டார் என்றார்கள்.
தன் மீதான விமர்சனங்களைத் துடைக்க "அண்ணாத்த" படத்திற்காக யார் யாரெல்லாம் பாசிட்டிவ்வாக டுவீட் போடுகிறார்களோ அவற்றையும், படத்தின் வசூல் பற்றி யார் யாரோ வெளியிடும் தகவல்களையும் கூட ரிடுவீட் செய்து வருகிறார்.
இதற்கு முன்பு அவரது படங்கள் வந்த போது கூட அவர் இப்படி செய்தது இல்லை. ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் தான் சரியாக படம் கொடுக்கவில்லை என்ற பேச்சு அவரது எதிர்காலத்திற்கும் மோசமான விளைவுகளைத் தரும். எனவே படத்தில் பங்காற்றிய மற்றவர்களை விடவும் இயக்குனராக அவரே களத்தில் இறங்கிவிட்டார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!