
‛தக் லைப் படத்தில் சிம்பு என்ட்ரி
துல்கர் சல்மான் நடிக்க இருந்த வேடத்தில் நடிப்பதற்கு சிம்புவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர்கள் தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார்களாம். இதனால் தக் லைப் படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு நடிப்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கனவே கமலின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் 48வது படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தக் லைப் படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அந்த படத்தில் சிம்பு நடிக்க தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் நடிக்கவும் வேறு சில நடிகர்களிடத்தில் தக்லைப் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!