
இயக்குனர் ஆனது எப்படி? - சண்டை இயக்குனர் சில்வா விளக்கம்
இயக்குனர் சில்வா கூறுகையில், ‛‛என் சின்ன வயதிலிருந்தே என்னை இங்கிருப்பவர்கள் தான் என் கை பிடித்து அழைத்து சென்றிருக்கிறார்கள். நான் இயக்குநர் ஆக வேண்டும் என என்னை விட வெறியாக இருந்தவர் விஜய் தான். தலைவா படத்திலிருந்தே எனக்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார் என்று ஊக்கம் தந்து, என்னை இயக்குநர் ஆக்கும் வரை உடன் நின்றவர் விஜய் தான். படம் பார்த்து கண் கலங்கி என்னால் கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார்.
இந்தப்படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப்படம் போல் செய்து தந்தார் சமுத்திரகனி. அவரால் தான் இந்தப்படம் முழுமையாக வந்துள்ளது. பூஜாவை பார்த்தவுடன் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். கலைவாணியிடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார்.
ரீமா கலிங்கல் திரைக்கதை கேட்டார். ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். நன்றாக நடித்திருக்கிறார். மானசி 8 வயது பெண் கிளிசரின் போடாமலே அவளுக்கு அழுகை வருகிறது. சொல்லும் நேரத்தில் சிரிக்கிறாள் அவள் மிகப்பெரிய உயரத்தை தொடுவாள். என்னுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!