
கர்மா நிச்சயம் தன் வேலையை காட்டும்: சுருதிஹாசன்
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சுருதிஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தன்னை பற்றிய கிசுகிசுக்கள் உலவிவரும் நிலையில், சுருதிஹாசன் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில், ‛பலர் தங்களுக்கான குழிகளை வெட்டி, குதிக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள். இதை நான் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். நாம் நமது வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். என்னதான் இருந்தாலும் கர்மா நிச்சயம் தன் வேலையை காட்டும். அந்த விளையாட்டை மட்டும் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுருதிஹாசனின் இந்த கருத்து ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் யாரை குறிப்பிடுகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!