வடிவேலு படத்தில் ஷிவானி நாராயணன்
மார் 02, 2022
Advertisement
தமிழில் டிவி தொடர்களில் நடித்திருந்தாலும், "பிக் பாஸ்" சீசன் 4ன் மூலம் அதிகப் பிரபலம் அடைந்தவர் ஷிவானி நாராயணன். பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர்.
இதனால், அவரைத் தேடி தற்போது பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் "விக்ரம்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ஷிவானி. இதற்கடுத்து பொன்ராஜ் இயக்கும் படம், ஆர்ஜே பாலாஜி இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
அடுத்து வடிவேலு நாயகனாக நடிக்க சுராஜ் இயக்கி வரும் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்திலும் நடிக்கிறாராம் ஷிவானி. வடிவேலுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “எனது மீம்ஸ் மற்றும் டிரோல்களை அவரது படங்களுடன் பார்ப்பதில் இருந்து அவருடன் சினிமாவில் நடிப்பது வரை… சாதனை நடிகர் வடிவேலு அவர்களுடன் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!