பீஸ்ட் டிரைலருக்கு ஷாரூக்கான் பாராட்டு
ஏப் 05, 2022
Advertisement
விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க, நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள "பீஸ்ட்" படம் அடுத்த வாரம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதன் ஹிந்தி டிரைலர் நேற்று வெளியானது. அந்த டிரைலரைப் பகிர்ந்து தன்னுடைய பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார் பாலிவுட் நடிகரான ஷாரூக்கான்.
“அட்லியுடன் அமர்ந்திருக்கிறேன், அவர் எந்த அளவிற்கு விஜய்யின் பெரிய ரசிகரோ அதே அளவிற்கு நானும் ரசிகர் தான். பீஸ்ட் குழுவிற்கு பெஸ்ட் ஆக அமைய வாழ்த்துகள். டிரைலர் மீனர்…லீனர்... ஸ்ட்ராங்கர்…ஆக உள்ளது,” எனப் பாராட்டியுள்ளார்.
விஜய் பட டிரைலரைப் பாராட்டியதோடு, தானும் விஜய் ரசிகர் தான் என ஷாரூக் பதிவிட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து, லைக் செய்து, கொண்டாடி வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!