மும்பையில் செட்டிலா... : சூர்யா பதில்
ஆக 16, 2023
Advertisement
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‛கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. திஷா பதானி, நட்டி எனும் நட்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பன்மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதை முடித்த பின்னர் சுதா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.
நடிகர் சூர்யா சென்னையில் உள்ள தனது பெற்றோரை பிரிந்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய அவர், ‛‛நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக வரும் செய்தி உண்மையில்லை. எனது பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோர் மும்பையில் படிக்கின்றனர். அவர்களை பார்க்க அடிக்கடி சென்று வருகிறேன். மற்றபடி நான் சென்னையில் தான் இருக்கிறேன்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!