
விஜய் பீஸ்ட் படத்தில் இணைந்த செல்வராகவன்
தற்போது லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சாணிக்காயிதம் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதன் மூலம் நடிகராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் செல்வராகவன். அந்தவிதமாக பீஸ்ட் படம் மூலம் ஒரு நடிகராகவும் செல்வராகவன் மிகப்பெரிய அளவில் பிரபலமாவார் என எதிர்பார்க்கலாம். அநேகமாக படத்தில் அவர் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!