சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லத்துரை
டிச 22, 2023
Advertisement
சமீபத்தில் வெளியான "ஜோ" படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. சீனு ராமசாமி இயக்குகிறார். புதுமுகங்கள் ஏகன், பிரிகிடாவுடன் யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, மானஸ்வி உள்பட பலர் நடிக்கிறார்கள். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி சீனு ராமசாமி கூறும்போது “கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல் கதை, காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகிறது. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!