
சீமான் படத்தில் நடிக்கும் போது கேள்வி கேட்டிருக்க வேண்டும் ; மாதவன் ஓபன் டாக்
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி பிறகு பின்னர் ஆக்சன், குணச்சித்திரம் என அனைத்து தரப்பு கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கக்கூடிய சிறந்த நடிகராக மாறியவர். பாலிவுட்டிலும் முத்திரை பதித்தார். தமிழில் அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் சீமான் இயக்கத்தில் "தம்பி" என்கிற படத்தில் நடித்தார். அந்தப்படம் மாதவனுக்கு மிகப்பெரிய திருப்பமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. அதை தொடர்ந்து மீண்டும் சீமான் இயக்கத்தில் "வாழ்த்துகள்" என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த "வாழ்த்துகள்" படத்தை பற்றி மாதவன் பேசும்போது, “பெரிய இயக்குனர்களும் சிறந்த குழுவினரும் இணைந்து பணியாற்றும்போது படம் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. அந்த படத்தின் உருவாக்கத்தில் நான் இன்னும் அதிக ஈடுபாடு காட்டியிருக்க வேண்டும். என் கருத்துக்களை, கேள்விகளை கண்டிப்பாக தெரிவித்து இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!