
சசிகுமாரின் வெப்சீரிஸ் ஆகஸ்ட் 7ல் வெளியாகிறது
8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் கிரைம் திரில்லர் ஜார்னரில் உருவாகி உள்ளது. இதில் சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியில் இது உருவாகியுள்ளது.
நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, "மணி" என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!